முதல்வரின் வருகைக்காக காவலர் செய்த செயல்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் - சென்னையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 5, 2024, 2:14 PM IST

சென்னையில் முதல்வரின் வாகனம் செல்வதற்காக சாலையில் போக்குவரத்தை காவலர் சரி செய்த போது நிகழ்ந்த விபத்தில் 5 வயது சிறுவன் உயிரழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை திருவல்லிக்கேனி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் மனைவி ஷாலினி, பேரன் அலோக்நாத் தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு காமராஜர் சாலையில், மெரினா கடற்கரை அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

ஆபாச படம் பார்ப்பவர்கள் கவனத்திற்கு.. உஷார்! முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன அதிர்ச்சி தகவல்!

Tap to resize

Latest Videos

undefined

அதே நேரத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புக்கான கான்வாய் வாகனம் கருணாநிதி நினைவிடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மகேந்திரன் வாகனங்களை ஓரமாகச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் ஓரமாக நிறுத்த முற்பட்ட ஆட்டோ மீது கார் ஒன்று மோதியுள்ளது.

இந்த விபத்தால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ காவலர் மகேந்திரன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனால் காவலர் மகேந்திரன், ஆட்டோ ஓட்டுநர் சேகர், ஷாலினி, சிறுவன் தர்ஷன் ஆகியோர் காயமடைந்தனர். விபத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் கயமடைந்தவர்களை உடனடியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார்.

Coimbatore Mayor : கோவை மாநகராட்சி திமுக வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த ரங்கநாயகி.?

அதன் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சேகர், ஷாலினி, காவலர் மகேந்திரன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

click me!