100 கி.மீ. வேகம்; எக்கச்சக்க வசதிகளுடன் சென்னை - காட்பாடியில் சீறிப்பாய்ந்த வந்தே மெட்ரோ ரயில்

By Velmurugan s  |  First Published Aug 3, 2024, 7:43 PM IST

சென்னையில் இருந்து காட்பாடிக்கு இன்று காலை வந்தே மெட்ரோ ரயில் சேவையின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.


சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாராத் ரயில், அம்ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் ஆகியவை பல்வேறு நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் நிறைவு பெற்றது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று சென்னை - காட்பாடி இடையே மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல்லில் ஒரே பைக்கில் சென்ற 4 பேர்; விபத்தில் மொத்த குடும்பத்தையும் காவு வாங்கிய கார்

Tap to resize

Latest Videos

மொத்தமாக 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஏசி வசதி, பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் உள் அலங்காரம், நவீன சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும், 200 பேர் நின்று செல்லும் வகையிலும் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

நாகையில் அரசு காப்பகத்தில் ஒரே நாளில் 8 சிறுமிகள் மாயம்; கடத்தல் கும்பல் கைவரிசை?

இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னை - காட்பாடி இடையே நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்தது. மறு மார்க்கத்தில் காலை 9.30 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு வில்லிவாக்கத்தை அடைந்தது.

பின்னர் 10.15 மணிக்கு வில்லிவாக்கத்தில் புறப்பட்டு அரக்கோணம் வழியாக 11.55 மணிக்கு அரக்கோணத்தை அடைந்தது. காட்படியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பகல் 2 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைந்தது. 

click me!