தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா! ஒரே நாளில் 82 பேர் பூரண குணமடைந்தனர்.. 2 நாளா ஒரு இறப்பு கூட இல்லை

Published : Apr 18, 2020, 06:28 PM IST
தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா! ஒரே நாளில் 82 பேர் பூரண குணமடைந்தனர்.. 2 நாளா ஒரு இறப்பு கூட இல்லை

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 1372ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருக்கிறது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக கட்டுக்குள் இருக்கிறது.

ஒருநாளைக்கு 1000-1500 டெஸ்ட் செய்யும்போதெல்லாம், சராசரியாக 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 4-5 நாட்களாக தினமும் 2500-3500 டெஸ்ட்கள் செய்யப்பட்டன. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

ஏப்ரல் 14ம் தேதி 31 பேருக்கும் 15ம் தேதி 38 பேருக்கும் 16ம் தேதி 25 பேருக்கும் நேற்று 56 பேருக்கும் கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 5363 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 49 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று  மற்றும் இன்று ஆகிய 2 நாட்களில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் வெறும் 1.1%ஆக உள்ளது. நேற்று 103 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் அயராத உழைப்பால் தினமும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி கொண்டிருக்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 365 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!