சென்னையில் பரபரப்பு.. 17 இ ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன.. எப்படி தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 14, 2022, 3:26 PM IST

நடவடிக்கை எடுப்பதற்குள் தீ விற்பனையகம் முழுக்க வேகமாக பரவியது. இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 17 எலெக்ட்ரிக் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.


சென்னை போரூர் குன்றத்தூர் பிரதான சாலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை மையம் இயங்கி வந்தது. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த விற்பனை மையத்தில் அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் எலெக்ட்ரிக் வாகன விற்பனை நடைபெற்று வந்தது. ராஜாரம் என்பவர் நடத்தி வரும் இந்த விற்பனை மையத்தில் மொத்தம் ஐந்து பேர் பணியாற்றி வருகின்றனர்.

திடீர் தீ விபத்து:

Tap to resize

Latest Videos

இந்த விற்பனை மையத்தில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றுக்கு சார்ஜ் போட்டனர். சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்த பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதை பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும், துரித நடவடிக்கை எடுப்பதற்குள் தீ விற்பனையகம் முழுக்க வேகமாக பரவியது. இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 17 எலெக்ட்ரிக் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

தீ பிடித்து எரிந்த 17 எலெக்ட்ரிக் வாகனங்களில் ஐந்து யூனிட்கள் முற்றிலும் புதியவை ஆகும். 12 எலெக்ட்ரிக் வாகனங்கள் சர்வீஸ் செய்வதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி அந்த விற்பனை மையத்தில் இருந்த மற்ற பொருட்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்து குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த விருகம்பாக்கம் தீயணைப்பு துறை வீரர்கள், ஒரு மணி நேரம் போராடு தீயை அணைத்தனர்.

வழக்குப் பதிவு:

முதற்கட்ட ஆய்வுகளின் படி அந்த விற்பனை மையத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து போரூர் காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எலெக்ட்ரிக் வாகன சர்ச்சை:

இந்தியாவில் சமீப காலங்களில் அடிக்கடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முன்னதாக பூனேவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதுதவிர தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். இத்துடன் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்தது. 

சமீபத்தில் பூனே நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றி சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததில், 20 எலெகெட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இவ்வாறு அடிக்கடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் பயனர்களிடையே புது எலெக்ட்ரிக் வாங்கும் எண்ணத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

click me!