கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. போக்குவரத்து ஆணையர்கள் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியும் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மீண்டும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் 5 ஆர்.டி.ஓக்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர் என தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர் விடுமுறை
சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் வரும் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளதால், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
undefined
ஆம்னி பேருந்து கட்டணம் கொள்ளை
சொகுசு, விரைவான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஆம்னி பேருந்துகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் பேருந்து கட்டணம் மும்மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமைச்சர் ஆய்வு
சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்தில் டிக்கெட் ரூபாய் 3000 வரையும் அதேபோல செமி ஸ்லீப்பர் ஏசி பேருந்தில் 2500 வரையும், படுக்கை வசதிகளுடன் கூடிய ஏசி பேருந்துகளில் ரூபாய் 3500 வரையும், சாதாரண குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் 2000 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ற தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்துகளில் ஏறி சோதனையிட்டார். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்பதை பயணிகளிடமும் அவர் கேட்டறிந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆன்லைனில் கூடுதல் கட்டணம்
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர்;- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. போக்குவரத்து ஆணையர்கள் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியும் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மீண்டும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் 5 ஆர்.டி.ஓக்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர் என தெரிவித்துள்ளனர்.