பரிசோதனை மிக குறைவு; பாதிப்பு மிக அதிகம்..! தமிழ்நாட்டின் மீது கருணை காட்டாத கொரோனா.. 286 பேர் உயிரிழப்பு

By karthikeyan VFirst Published Jun 8, 2020, 7:01 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், தமிழக அரசு அதை செய்ய தவறுகிறது.

நேற்று 15,671 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 14,982 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைகள் குறைவு; ஆனால் பாதிப்பு மட்டும் அதிகம். நேற்று 1515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 33229ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1149 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 23298ஆக அதிகரித்துள்ளது. இன்று 528 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை 17527ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 286ஆக அதிகரித்துள்ளது. 
 

click me!