தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா.. 1000ஐ கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

Published : Apr 12, 2020, 06:11 PM IST
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா.. 1000ஐ கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது.   

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தேசிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை 8600ஐ கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 

நேற்று நிலவரப்படி, தமிழ்நாட்டில் 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  இன்றைக்கு மேலும் 106 பேருக்கு கொரோனா இருப்பதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தினார். 

இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10,655 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் 1075 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று வரை 9527 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இன்று ஒருநாளில் மட்டும் சுமார் 1100 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 106 பேருக்கு உறுதியாகியுள்ளது. 

எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 39,041 பேரும் அரசு கண்காணிப்பில் 162 பேரும் இருப்பதாகவும், 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 58,189 பேர் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும் கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!