ஹெல்மெட் இல்லையா ?? .. இனி "1000" ரூபாய் அவுட் ... உஷார் மக்களே உஷார் !!

By Asianet TamilFirst Published Aug 16, 2019, 12:19 PM IST
Highlights

தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் இனி 1000 ரூபாய் அபராதம் சென்னை மாநகர காவல்துறையால் வசூலிக்கப்படும் . சுதந்திர தினமான நேற்றில் இருந்து இது நடைமுறைக்கு வந்தது .

நாடெங்கும் விபத்துகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . தலைக்கவசம் இல்லாமல் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன . இதை தடுக்க , தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தினாலும் , அதை பெரும்பாலானோர் கேட்பதாக இல்லை .

இதனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துதுள்ளது . அதன்படி இனி தலைக்கவசம்  இல்லாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதம் 100 இல் இருந்து 1000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது .

சுதந்திர தினமான நேற்றில் இருந்து சென்னை மாநகர பகுதிகளில் இதை முழுமையாக அமல்படுத்தினார் .அதன்படி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு நேற்று அதிர்ச்சி காத்திருந்தது . அவர்களை மறித்த காவல்துறையினர் , அவர்களிடம் இருந்து 1000 அபராதம் வசூலித்தனர் .

இதுமட்டும் இல்லாது ,பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது . அவர்களும் தலைக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் வசூலிக்கப்படுகிறது .

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி , குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுபவர்கள் , இன்ஸுரன்ஸ் இல்லாத வாகனங்கள் என அனைத்திற்கும் அபராத தொகை ஏற்றப்பட்டுள்ளது .
 

click me!