சென்னை கமிஷ்னர் ஆகும் ஜாஃபர் சேட்...! பரபரக்கும் தலைமைச் செயலகம்..!

By Selva Kathir  |  First Published Aug 16, 2019, 10:21 AM IST

தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியை ஜாஃபர் சேட் குறி வைப்பதாக சொல்கிறார்கள். அரசியல் ரீதியான ஆப்பரேசன்கள் பலவற்றை செய்துள்ள ஜாபர் சேட்டை சென்னை ஆணையராக்கினால் பலன் அடைய முடியும் என்று இதற்கான பைல்கள் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியபடி நகர்ந்து வருகின்றன என்று சொல்கிறார்கள்.


சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஜாஃபர் சேட் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் தமிழக காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டவர் ஏ.கே.விஸ்வநாதன். அதற்கு முன்பு வரை சென்னை ஆணையர்களாக இருந்த பலரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஆனால், பொறுப்பேற்றது முதல் தற்போது வரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருப்பவர் விஸ்வநாதன். அதே சமயம் அவரது பெயர் நல்ல காரியங்களுக்கு மட்டுமே பத்திரிகைகளில் அடிபடும். 

Tap to resize

Latest Videos

சென்னை மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் தற்போது உள்ளது என்றால் அதற்கு காரணம் விஸ்வநாதன் தான். இதற்காக நேற்று சுதந்திர தின விழாவில் விஸ்வநாதனை பாராட்டி விருது கொடுத்து கவுரவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் விஸ்வநாதனை அரசியல் ரீதியாக பயன்படுத்த முடியவில்லை என்கிற ஒரு கவலை எடப்பாடிக்கு நீண்ட காலமாகவே உள்ளதாக சொல்கிறார்கள். 

தன்னுடைய வேலையை கமிஷ்னர் என்கிற வகையில் சிறப்பாக செய்தாலும் ஆட்சியாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய சில விஷயங்களில் நழுவி விடுவதாகவும் விஸ்வநாதன் மீது ஆட்சியாளர்களுக்கு ஒரு குறை இருந்து வருகிறது. மேலும் சென்னை தற்போது திமுகவின் கோட்டை என்றாகிவிட்ட நிலையில் அதனை உடைக்க சில வியூகங்களை அதிமுக தரப்பு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன் முதல்கட்டமாக சென்னை மாநகர ஆணையரை மாற்றுவது தான் என்கிறார்கள். அதன்படி தற்போது சென்னை மாநகர ஆணையராக இருக்கும் விஸ்வநாதனை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சென்னை மாநகர காவல் ஆணையராக டிஜிபி ரேங்கில் உள்ள ஜாஃபர் சேட்டை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். 

திமுக ஆட்சி காலத்தில் கலைஞர், கனிமொழிக்கு மிக நெருக்கமாக இருந்தவர் ஜாஃபர் சேட். இதன் காரணமாகவே ஜெயலலிதா ஆட்சியில் சுமார் 5 வருடங்களும் அதன் பிறகு எடப்பாடி ஆட்சியில் சுமார் 2 வருடங்களும் ஓரம்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தார் ஜாபர் சேட். ஆனால், கடந்த மார்ச் மாதம் யாரும் எதிர்பாராத வகையில் சிபிசிஐடி டிஜிபியாக நியமிக்கப்பட்டார் ஜாஃபர் சேட். இதன் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த அவர் தமிழகத்தின் டிஜிபி பதவிக்கு குறி வைத்தார். 

ஆனால், அவர் மீதான நெகடிவ் விஷயங்கள் ஜே.கே.திரிபாதியை டிஜிபியாக்கிவிட்டது. இதனால் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியை ஜாஃபர் சேட் குறி வைப்பதாக சொல்கிறார்கள். அரசியல் ரீதியான ஆப்பரேசன்கள் பலவற்றை செய்துள்ள ஜாபர் சேட்டை சென்னை ஆணையராக்கினால் பலன் அடைய முடியும் என்று இதற்கான பைல்கள் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியபடி நகர்ந்து வருகின்றன என்று சொல்கிறார்கள்.

click me!