அரியலூரை அலறவிடும் கொரோனா... கோயம்பேடு சந்தையால் ஒரே நாளில் உச்சத்தை எட்டியது..!

By vinoth kumar  |  First Published May 6, 2020, 2:38 PM IST

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  168  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202ஆக உயர்ந்துள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  168  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 4058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தையை தொடர்புடைய சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் தனது சொந்த ஊரான அரியலூருக்கு சென்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து, அரியலூருக்கு சென்ற ஏராளமான கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், இன்று ஒரே நாளில் மட்டும் 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தாரையும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 202ஆக உயர்ந்துள்ளது. 

click me!