அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7000ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. 220க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1380 பேரும் அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 911 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்றுவரை 834ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று புதிதாக 77 பேர் பாதிக்கப்பட்டதால் 911ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் போதிலும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
undefined
இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கேரளாவில் இருந்து தமிழகம் திரும்பிய அந்த நபர் 6ம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருவதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்துவருகின்றனர். ஆனால், சிலர் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் ஊரடங்கை பின்பற்றாமல் இருந்துவரும் நிலையில், இதுபோன்று சிலர் தற்கொலை செய்துகொள்வது போன்ற சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.