காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததால் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததால் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த முனியமுத்துவின் மகள் அபிநயா(25). அதே பகுதியை சேர்ந்த செல்வம்(30) என்பரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து செல்வம் உயிரிழந்துவிட்டார். இதனால் அபிநயா அதிர்ச்சியில் மீண்டும் வர முடியாமல் சோகத்தில் இருந்துள்ளார்.
undefined
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி அபிநயா வீட்டில் இருந்த விஷத்தை (எலி பிஸ்கட்) எடுத்து சாப்பிட்டு வாயில் நுரைதள்ளிய வாறு மயக்க நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றிபரிதாபமாக உயிரிழந்தார். காதலன் விபத்தில் இறந்த வேதனையில் இருந்த காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.