
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ரேணுகா மற்றும் குழந்தைகள் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் கழுத்தில் கிடந்த தாலி நகர்ந்து போவது போல் உணர்ந்த ரேணுகா திடுக்கிட்டு எழுந்துள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த தாலி செயினை அறுக்க முற்பட்டுள்ளனர். அப்போது தாலி செயினை பிடித்துக் கொண்டு ரேணுகா போராடியுள்ளார். பின்பு தாலி செயினின் பாதிப்பகுதியோடு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்பு ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எழுந்து ஓடி வந்தனர்.
23 ஆண்டு கால ஆசிரியர் பணி: வகுப்பறையில் மாணவர்கள் கண் முன்னே உயிர் பிரிந்த சோகம்
தாலி செயினை பறிப்பதற்கு முன்பாகவே பீரோவை உடைத்து உள்ளே இருந்த தோடு, சிமிக்கி, வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை பார்த்த பொழுது அது மயக்க நிலையில் இருந்துள்ளது.
அரியலூரில் மனைவிக்கு உணவுக்கு பதிலாக சாணத்தை கொடுத்து சித்ரவதை - பெண் கதறல்
கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க துவங்குவதற்கு முன்பே வீட்டுக்குப் பின்புறம் மது அருந்திவிட்டு வளர்ப்பு நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து நாயை மயக்கம் அடைய செய்து விட்டு சாவகாசமாக வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், 3 பவுன் தாலிச் செயின், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆண்டிமடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.