நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

By Velmurugan s  |  First Published Mar 14, 2023, 6:55 PM IST

அரியலூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனையின் சேவையை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியத்தை வெளியிட்டார்.


அரியலூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனையை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், நான் தேர்தல் பிரசாரத்தில் நீட் தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அது என்ன என்று ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

நான் தேர்தல் பிரசாரத்தில் கூறியது போலவே, சட்ட மன்றத்தில் நான் பேசிய கன்னிப் பேச்சில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசினேன். இன்று அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் 22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்திற்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. 

கோவையில் நடந்த மத்திய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம்; கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்

அனிதா நினைவு அரங்கம் என்று இது அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் பொழுதெல்லாம் நீட் தேர்வுக்காக நாம் போராடுவது நினைவிற்கு வரும். அண்மையில் பாரதப் பிரதமரை சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை நீட் தேர்வு ரத்து. அதற்கு பாரதப் பிரதமர் மோடி நீட் தேர்வு தேவை என்பதற்கான அவசியங்களை எடுத்துக் கூறினார். ஆனால் நான் தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வை ஏற்கவில்லை. திமுக நீட் தேர்வு ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டத்தினை தொடரும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன். 

சாலையோரத்தில் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் தமிழக இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்

திமுக சார்பில் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்பது எனது நீட் தேர்வின் ரகசியம் என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் இதுவரை கூறிவந்த நீட் தேர்வின் ரகசியம் இன்று அரியலூரில் அவரால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடப்படதக்கது. இதனை அடுத்து மருத்துவக் கல்லூரி கலையரங்கத்திற்கு நீட் தேர்வு போராளி என அழைக்கப்படும் அனிதா பெயர் சூட்டப்பட்ட நிலையில் கலையரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். 

click me!