ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளத்தொடர்பு வைத்து ஆசிரியை உல்லாசம்... அடுத்தவன் பொண்டாட்டிக்காக வெட்டுக்குத்து..!

By vinoth kumar  |  First Published Nov 24, 2019, 3:48 PM IST

ஆசிரியை என் ஆள், நீ அவளிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதே என எச்சரித்தார். அதற்கு, நாங்கள் இரண்டு பேரும் டீச்சர்கள், நாங்கள் பாடம் சம்பந்தமாக பேசிக்கொள்வோம். அதை கேட்க நீ யார்? என்றார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


2 குழந்தைகளின் தாயான ஆசிரியை யாருக்கு சொந்தம் என்பதில் கள்ளக்காதலர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் திருமழபாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராஜராஜன் (28). திருமணமாகாதவர். இவர் அப்பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தனது தாயார் பாரதியை தினம் பள்ளிக்கு அழைத்து சென்று வருவார். அப்போது, அப்பள்ளியில் பணியாற்றும் திருமணமான ஒரு ஆசிரியைக்கும் ராஜராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது. இருவரும் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், அந்த ஆசிரியைக்கும், மற்றொரு ஆசிரியர் ஹென்றி (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியை இரண்டு பேருடனும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது நீண்ட நாட்களுக்குப்பிறகே ராஜராஜனுக்கு தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜராஜன், திருமழப்பாடி ஆசிரியை என் ஆள், நீ அவளிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதே என எச்சரித்தார். அதற்கு, நாங்கள் இரண்டு பேரும் டீச்சர்கள், நாங்கள் பாடம் சம்பந்தமாக பேசிக்கொள்வோம். அதை கேட்க நீ யார்? என்றார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும், அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஏன் நீங்க சண்டை போடுகிறீர்கள். இனி இப்படி நடந்தால் 3 பேரையும் கைது செய்வோம் சிறையில் அடைத்து விடுவேன் என்றார். ஆனால், அந்த இருவரும் ஆசிரியையுடன் தொடர்பில் இருந்து வந்தனர். இதனால், ஆசிரியர் ஹென்றியும் அவரது ஆதரவாளர்கள், மற்றும் ராஜராஜன் ஆதரவாளர்கள் இருவரும் மாறி மாறி உருக்கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் இந்த சண்டைக்கு மூல காரணமாக இருந்த ஆசிரியையை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

click me!