அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த தேளூர் கிராமத்தில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயி தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. விவசாயம் செய்து வந்தார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய பின்னர் விவசாய மோட்டார் அறையில் இருந்துள்ளார். பகல் 1 மணியளவில் அவரது மனைவி கோவிந்தசாமிக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். பின்னர் வழக்கம் போல் மாலை நேரத்தில் வீட்டிற்கு வரவேண்டிய கோவிந்தசாமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
கல்லூரியை ஒருமுறை கூட பார்க்காமல் பட்டம்பெறுபவர்கள் தான் எய்ம்ஸ் மாணவர்கள் - எம்.பி.வெங்கடேசன்
undefined
இதனால் அவரது மனைவி விவசாய நிலத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கோவிந்தசாமி தலையில் அடிபட்டு ரெத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். கணவரின் நிலையை பார்த்து அலறிய மனைவியின் சத்தத்தைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்து பார்த்தபோது கோவிந்தசாமி இறந்துவிட்டதை உறுதி படுத்தினர்.
இடைத்தேர்தலில் எதிரணியினரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - வைகோ ஆவேசம்
பின்னர் இது தொடர்பாக தேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், கோவிந்தசாமி அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் பையில் வைத்திருந்து ரூ.5 ஆயிரத்தை காணவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். கோவிந்தசாமி நிலைத் தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா அல்லது நகை, பணத்திற்காக யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.