
மே.தீவுகளுக்கு எதிராக மோதவுள்ள ஜிம்பாப்வே அணியில் மூத்த வீரரான பிரண்டன் டெய்லர் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாட உள்ள ஜிம்பாப்வே அணியில் சீனியர் வீரரான பிரண்டன் டெய்லர் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது ஜிம்பாப்வே அணி.
வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், அணியின் மூத்த வீரர் பிரண்டன் டெய்லர் மீண்டும் இடம் பெற்றுள்ளார்
கடைசியாக இந்தியாவிற்கு எதிராக 2015 உலக கோப்பைப் போட்டியில் விளையாடிய டெய்லர், பின்னர் நாட்டிங்காம் ஷயர் எனும் கௌண்டி அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாட ஒப்பந்தமானார்.
சமீபத்தில்தான் அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டார். அதுவும் முன்கூட்டியே. இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.