கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி போலீசில் புகார்…..

Asianet News Tamil  
Published : Oct 18, 2017, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது  தம்பி மனைவி போலீசில் புகார்…..

சுருக்கம்

a police complaint against yuvaraj singh

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அவரின் தாய் ஷப்னம், தம்பி ஜோராவர் ஆகியோர் மீது முன்னாள் பிஸ்பாஸ் போட்டியாளரும், யுவராஜ்சிங்கின் தம்பி ஜோராவர் மனைவியுமான அகான்ஷா போலீசில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு இந்த ஆண்டு தலைதீபாவளியாகும். இந்த சூழலில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.வடமாநில சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தொடரில் அகான்ஷா நடித்திருந்தார். இவர் யுவராஜ் சிங்கின் சகோதரர் ஜோராவரை திருமணம் செய்துள்ளார். இந்த வழக்கு குறித்து வரும் 21-ந்தேதி விசாரணைக்கு பின்பே யாரிடமும் கருத்து தெரிவிக்க முடியும் என அகான்ஷா தெரிவித்துவிட்டார்.இது குறித்து நடிகை அகான்ஷாவின் வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் கூறுகையில், “ அகான்ஷா தனது கணவர் ஜோராவர் மீதும், அவரின் சகோதரர் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவரின் தாய் ஷப்னம் ஆகியோர் மீது குடும்ப வன்முறையின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.உடல்ரீதியாக அகான்ஷாவை இவர்கள் துன்புறுத்தவில்லை. மனரீதியாகவும், பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளனர். இதுக்கு யுவராஜ் சிங் தான் காரணம் என கூறுகிறார். யுவராஜ் அமைதியான பார்வையாளராகஇருந்து கொண்டு, அகான்ஷாவை கொடுமைப்படுத்தி வருகிறார்.யுவராஜ் சிங்கும், அவரின் தாய் ஜோராவரும், அகான்ஷாவை குழந்தை பெற்றுக்கொள்ளக் கூறி வலியுறுத்தி வருகின்றனர். யுவராஜ் சிங்கும் இதை கருத்தை வலியுறுத்தி வருகிறாராரம். தாயின் கட்டளைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறி, அகான்ஷாவை யுவராஜ் அடிக்கடி கோபமாகப் பேசியுள்ளார். இதையடுத்து குடும்பவன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்துக்கு சரிவு, ஆஸி. ஆதிக்கம்; இந்தியா எந்த இடத்தில்?
டி20 உலகக் கோப்பை 2026: ஐபிஎல் வீரர்களுடன் நியூசி. அணி, சான்ட்னர் கேப்டன்