
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோள் பந்தாட்டப் போட்டி இன்று இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோள் பந்தாட்டப் போட்டி இன்று நடைபெறுகிறது.
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோள் பந்தாட்டப் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில், "சூப்பர் 4 ஸ்டேஜ்' ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் எதிர்கொள்கின்றன. இந்த ஆட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
குரூப் சுற்றில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் அபார வெற்றிக் கண்டுள்ளது இந்திய அணி. எனவே, இந்த ஆட்டத்திலும், தென் கொரியாவை தோற்கடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
அதேசமயத்தில் தென் கொரியாவையும் எளிதாக நினைத்துவிடக் கூடாது. அந்த அணி தனது பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் இடத்தை பிடிக்ககூடிய அளவுக்கு அதற்கு திறமை வாய்ந்த வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.