யூத் ஒலிம்பிக்ஸ்: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அபார வெற்றி...

First Published Apr 27, 2018, 11:08 AM IST
Highlights
Youth Olympics Success of Indian Women to defeat South Korea


யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டியில் தென்கொரியாவை 10-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஜூனியர் மகளிர் அணி வீழ்த்தி அபார வெற்றி கண்டது. 

அர்ஜென்டினா பியனோஸ் அயர்ஸ் நகரில் யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்தாண்டு இறுதியில் நடக்கின்றன. இதற்கான யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. 

இதன் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய ஜூனியர் ஆடவர், மகளிர் அணிகள் எளிதாக வெற்றி பெற்றன. அதே நேரத்தில் நேற்று நடந்த தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி, சங்கீதா குமாரி, மும்தாஸ் கான், தீபிகா ஆகியோர் சிறப்பாக ஆடி கோலடித்தனர்.
 
அதன்படி, தென்கொரியா அணியை 10-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஜூனியர் மகளிர் அணி அடித்து நொறுக்கியது.

மகளிர் அணி அடுத்த போட்டியில் தாய்லாந்தை எதிர்கொள்கின்றன.

ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் விவேக் சாகர், ராகுல்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.  இந்திய ஆடவர் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.

ஆடவர் அணி அடுத்து ஹாங்காங், தென்கொரியாவை எதிர்கொள்கின்றன. 

tags
click me!