யூத் ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஜூனியர் அணிகள் அரையிறுதிக்கு அபார முன்னேற்றம்...

First Published Apr 28, 2018, 10:56 AM IST
Highlights
Youth Olympic Hockey Indian Junior teams progress to semi final ...


யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய ஜூனியர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு அசத்தலாக முன்னேறின. .

யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய ஜூனியர் ஆடவர் அணி நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் 21-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காக் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் கொரியாவை 12-5 என்ற கோல் கணக்கில் வென்றது. 

ஹாங்காக்குக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் கேப்டன் விவேக் சாகர், ராகுல் குமார், ரவிச்சந்திரா, முகமது அலிஷான், சிவம் ஆனந்த்,, சஞ்சய் ஆகியோர் சிறப்பாக ஆடி கோலடித்தனர்.

தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் ஆதிக்கமே ஓங்கி இருந்தது.

அதேநேரத்தில் ஜூனியர் மகளிர் அணி 9-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. மகளிர் அணியில் மும்தாஸ் கான், சங்கீதா குமாரி, லால்ரெசிமானி, தீபிகா, இஷிகா ஆகியோர் சிறப்பாக ஆடி கோலடித்தனர். அரையிறுதியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது.

இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.இத்தகுதிப் போட்டியில் வெற்றி பெறுவதின் மூலம் பியனோஸ் அயர்ஸ் நகரில் நடக்கவுள்ள யூத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

அடுத்ததாக வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியை அரையிறுதியில் இந்திய ஜூனியர் ஆடவர் எதிர்கொள்வர்.

tags
click me!