இந்தியன் ஹாக்கி: ஆண்களுக்கு ஸ்ரீஜேஷ், பெண்களுக்கு ராணி ராம்பால் கேப்டன்களாக நியமனம்... 

First Published Apr 28, 2018, 10:40 AM IST
Highlights
The blind teacher arrested for raping the 10th grade student...


இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஸ்ரீஜேஷ் மற்றும் மகளிர் ஹாக்கி அணிக்கு  ராணி ராம்பால் ஆகியோர் கேப்டன்களாக 2018-ஆம் ஆண்டு இறுதி வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் முகமது முஷ்டாக் அகமது நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "காயம் காரணமாக சில மாதங்களாக ஆடாமல் இருந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தலைமையில் இந்திய அணி கடந்த 2016-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வெள்ளி வென்றது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் கேப்டனாக தொடர்ந்தார். 

மேலும் ஜூனியர் அணியின் கோல்கீப்பர்களான விகாஸ் தாஹியா, கிருஷண் பதக் ஆகியோருக்கு சிறப்பான பயிற்சி அளித்ததால் கடந்த 2016-இல் ஜூனியர் உலகக் கோப்பையும் இந்தியா வசமானது.

கடந்த 2017-ஆம் ஆண்டு அஸ்லன்ஷா ஹாக்கிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீஜேஷ் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அதே நேரத்தில் ராணி ராம்பால் தலைமையிலான மகளிர் அணி ஆசியக்கோப்பையை வென்றது. 12-ஆம் இடத்தில் இருந்து தற்போது 10-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. 

12 ஆண்டுகளில் முதன்முறையாக கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது" என்று அவர் தெரிவித்தார்.

tags
click me!