
உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிந்து வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த தோல்வியடைந்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் இந்தப் போட்டி நேற்றுத் தொடங்கியது.
இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-11, 16-21, 21-18 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இந்த ஆட்டம், 63 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஆடவர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸன்னை எதிர்கொண்ட தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-13, 21-17 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.