
உலக வலைகோல் பந்தாட்ட லீக் போட்டியில் ஸ்பெயின் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது பெல்ஜியம் அணி.
உலக வலைகோல் பந்தாட்ட லீக் போட்டி புவனேசுவரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பெல்ஜியம் முதல் கோலை போட்டு தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் ஃப்ளாரென்ட் வான் அபெல் அந்த கோலை அடித்து அசத்தினார்.
முதல் பாதி முடியும்வரை ஸ்பெயினுக்கு கோல் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதன்படி, முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் நீ முந்தியா நான் முந்தியா என்று பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகள் டஃப் கொடுத்த போதும் அந்த அணிகளால் கோல் போட முடியவில்லை.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பெல்ஜியம் அடுத்தடுத்து கோல் அடித்தது. அந்த அணியின் லாய்க் லுய்பெர்ட் 38-வது நிமிடத்திலும், அவரே 57-வது நிமிடத்திலும், சக வீரர் செட்ரிக் சார்லியரும் ஸ்கோர் ஒரு கோலும் போட பெல்ஜியம் 4-0 என முன்னேறியது.
ஸ்பெயின் அணி நம்பிக்கை இழந்த நிலையில், அடுத்த அடியாக பெல்ஜியம் 5-வது கோல் அடித்தது. அதனை அந்த அணியின் லாய்க் லுய்பெர்ட் 59-வது நிமிடத்தில் அடிக்க, இறுதியில் பெல்ஜியம் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.