
பத்தொன்பது வயதிற்கு உள்பட்டோருக்கான (யு-19) ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்தொன்பது வயதிற்கு உள்பட்டோருக்கான (யு-19) ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 13 தொடங்குகிறது.
பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டி நியூஸிலாந்தில் நடைபெற இருக்கிறது.
போன சீசனில் இந்தியா, இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதி படுதோல்வி கண்டது. அதற்கு முன்பு 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்ட யு-19 இந்திய அணிக்கு பிருத்வி ஷா தலைமைத் தாங்குகிறார்.
அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் விவரம்:
பிருத்வி ஷா (கேப்டன்), சுபம் கில் (துணை கேப்டன்), மன்ஜோத் கல்ரா, ஹிமான்சு ரானா, அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஆர்யன் ஜுயல் (விக்கெட் கீப்பர்), ஹார்விக் தேசாய், சிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, இஷான் போரெல், அர்ஷ்தீப் சிங், அனுகுல் ராய், சிவா சிங், பங்கஜ் யாதவ்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.