
2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், "2019-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 29 முதல் மே 19-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மே 30-ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை போட்டியில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை ஜூன் 2-ஆம் தேதி எதிர்கொள்வதாக இருந்தது.
எனினும், லோதா குழு பரிந்துரைகள் படி ஐபிஎல் போட்டிக்கும், சர்வதேச போட்டிக்கும் இடையே 15 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
அதனடிப்படையில், இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் ஜூன் 5-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பான தகவல் ஐசிசிக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
ஐசிசியின் முக்கியமான போட்டிகள் யாவும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திலிருந்தே தொடங்கியிருந்தது. 2015 உலகக் கோப்பை போட்டியிலும், 2017 சாம்பியன்ஸ் டிராபியிலும் இதுவே நிகழ்ந்தது. எனினும், இம்முறை இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துடன் போட்டி தொடங்கவில்லை.
இதனிடையே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்திய அணியின் எதிர்கால சுற்றுப் பயணங்கள் குறித்தும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2019 - 2023 காலகட்டத்தில் இந்தியா அதிகபட்சமாக 309 நாள்களுக்கு அனைத்து வடிவங்களிலுமான கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
முந்தைய அட்டவணையுடன் ஒப்பிடுகையில் தற்போது 92 நாள்கள் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய அணி சொந்த மண்ணில் ஆடும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 15-இல் இருந்து 19-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பகுதியாக நடைபெறும்" என்று தெரிவித்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.