உலக குத்துச்சண்டை போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது..

 
Published : Feb 09, 2018, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
உலக குத்துச்சண்டை போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது..

சுருக்கம்

World Boxing Tournament begins today in Delhi

உலக குத்துச்சண்டை தொடர் போட்டிகள் டெல்லியில் இன்றுத் தொடங்குகிறது.

இன்றுத் தொடங்கும்க் உலக குத்துச்சண்டை தொடர் போட்டிகளில் "இன்டியன் டைகர்ஸ்' என்ற பெயரில் பங்கேற்கிறது. இந்த இந்திய அணி முதல் ஆட்டத்தில் நாளை கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் சார்பிலான இந்திய அணியில், கவிந்தர் சிங் பிஷ்த் (ஃப்ளை வெயிட்), அங்குஷ் தாஹியா (லைட் வெயிட்), துர்யோதன் சிங் நெகி (வெல்டர் வெயிட்), பிரிஜேஷ் யாதவ் (லைட்-ஹெவி வெயிட்), பிரவீண் குமார் (சூப்பர் ஹெவி வெயிட்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இப்போட்டியில் ஆசிய அணிகளுக்கான குரூப் "சி'யில் இந்தியாவுடன் கஜகஸ்தான், சீனா, ரஷியா அணிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அணிகளுக்கான "ஏ' பிரிவில் கியூபா, கொலம்பியா, உஸ்பெகிஸ்தான், வெனிசூலா அணிகளும், ஐரோப்பிய அணிகளுக்கான "பி' பிரிவில் குரோஷியா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி அணிகளும்  இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா