இன்று தொடங்குகிறது 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி - இந்தியா பங்கேற்பு..

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
இன்று தொடங்குகிறது 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி - இந்தியா பங்கேற்பு..

சுருக்கம்

The 23rd Winter Olympic Games begins today

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் இன்றுத் தொடங்குகிறது.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் இன்றுத் தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 92 நாடுகளைச் சேர்ந்த 2,952 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 15 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அல்பென்சியா விளையாட்டுப் பூங்கா, காங்னியுங், போக்வாங், ஜியோங்சியான் ஆகிய இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் லூக் விளையாட்டு வீரர் ஷிவா கேசவன், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் வீரர் ஜெகதீஷ் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, பியோங்சாங் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவர் ஹர்ஜிந்தர் சிங், “போட்டிகள் நடைபெறவுள்ள விளையாட்டு கிராமத்தின் மேயரால் இந்திய அணிக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.  அந்த நிகழ்ச்சியின்போது இந்திய தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது.

பியோங்சாங்கில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மைனஸ் 20 டிகிரி செல்ஷியஸ் குளிர் உறைய வைக்கிறது. இந்திய வீரர்களில் ஷிவா கேசவன் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். ஜெகதீஷ் சிங் இன்று காலை தென் கொரியா வருகிறார்” என்று அவர் கூறினார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி