
டெல்லியில் நடைபற்று வரும் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன், நீது கங்காஸ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
50 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை 5-0 என வீழ்த்தினார்.
நாடா, ஐபிஎல்லா..? முடிவெடுத்தே தீரணும்..! பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை
48 கிலோ எடைப்பிரிவினருக்கான அரையிறுதியில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பால்கிபெகோவாவை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இறுதிப் போட்டிக்கு முன்னேறி மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார் நிகத் ஜரீன்.
நான்கு பதக்கங்களை உறுதி செய்துள்ள இந்தியா, கடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற மூன்று பதக்கங்களை விட அதிகமாக வென்று சாதனை படைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகத் ஜரீன் மட்டுமல்லாமல் லோவ்லினா, நிது, சாவீட்டி ஆகியோர் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.