காமன்வெல்த்தில் கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்! 1.2 மில்லியன் டிக்கெட் விற்பனை

By karthikeyan VFirst Published Jul 21, 2022, 4:03 PM IST
Highlights

காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.  கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கு மட்டுமே 12 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
 

காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடக்கிறது. 72 நாடுகளிலிருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

இந்த முறை காமன்வெல்த்தில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவுள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பார்படாஸ் மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கலந்துகொண்டு ஆடுகிறது.

இதையும் படிங்க - Commonwealth Games 2022:ஊக்கமருந்து பயன்படுத்தியதால் இந்திய தடகள வீராங்கனைகள் தனலக்‌ஷ்மி,ஐஸ்வர்யா பாபு நீக்கம்

காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட்டை சேர்த்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த்தில் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கிலாந்தில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் கணிசமாக உள்ளனர். எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்திய, பாகிஸ்தான் ரசிகர்களை தவிர, இங்கிலாந்து ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ஆர்வத்துடன் இருக்கின்றனர். காமன்வெல்த்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை காண இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளன. அதில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் தான் அதிகமாக விற்றுள்ளது.

இதையும் படிங்க - காமன்வெல்த் 2022 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள்..! முழு பட்டியல் இதோ

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூலை 31ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் தொடர்ந்து அதிகமாக விற்றுவருகின்றன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி:

ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வெர்மா, சபினேனி மேகனா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), யாஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராஜேஷரி கெய்க்வாட், பூஜா வஸ்ட்ராகர், மேக்னா சிங், ரேணுகா தாகூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், ஸ்னே ராணா.
 

click me!