மகளிர் ஹாக்கி: வலுவான கொரியாவையே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா...

Asianet News Tamil  
Published : Mar 10, 2018, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
மகளிர் ஹாக்கி: வலுவான கொரியாவையே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா...

சுருக்கம்

Womens Hockey India Won the Great Korea

மகளிர் ஹாக்கி போட்டியில் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது இந்தியா.

மகளிர் ஹாக்கி போட்டி நேற்று தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை குருஜித் கௌர் அற்புதமாக கோல் அடித்து இந்திய அணியின் கணக்கை தொடக்கி வைத்தார். பின்னர் 14-வது நிமிடத்தில் தீபிகா 2-வது கோலை பதிவு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணி கொரியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. மேலும் சிறப்பான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தி கொரிய வீராங்கனைகளை திணறடித்தது.

இந்த நிலையில், 47-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பூணம் ராணி ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

கடைசியாக கொரிய வீராங்கனை மீ ஹியூன் பார்க் 57-வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஆறுதல் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பை 2026: ஐபிஎல் வீரர்களுடன் நியூசி. அணி, சான்ட்னர் கேப்டன்
வேற லெவல் வெற்றி.. கிரிக்கெட்டில் ஜம்மு காஷ்மீர் புதிய சாதனை.. எதிரணியை வச்சு செஞ்ச இளம் வீரர்கள்!