உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்காக முதல் வெள்ளியை வென்ற அஞ்சும் முட்கில்; முதலிடத்தில் இந்தியா...

Asianet News Tamil  
Published : Mar 10, 2018, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்காக முதல் வெள்ளியை வென்ற அஞ்சும் முட்கில்; முதலிடத்தில் இந்தியா...

சுருக்கம்

World Cup shootings anjum mutkil won first silver for India ...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் அஞ்சும் முட்கில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார். 

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்ஸிகோவின் குவாதலஜரா நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், அஞ்சும் முட்கில் 454.2 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

சீனாவின் ருய்ஜியாவ் பெய் 455.4 புள்ளிகளுடன் தங்கமும், சகநாட்டவரான டிங் சன் 442.2 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

இந்தப் பிரிவில் பங்கேற்ற இதர இந்திய வீராங்கனைகளான காயத்ரி மற்றும் தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் முறையே 15 மற்றும் 16-வது இடங்களைப் பிடித்தனர். 

ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனிஷ் பன்வாலா 578 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தார். 

மற்றொரு இந்தியரான நீரஜ் குமார் 569 புள்ளிகளுடன் 13-வதாக வந்தார்.

இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும். இத்துடன் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

சீனா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!
WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்துக்கு சரிவு, ஆஸி. ஆதிக்கம்; இந்தியா எந்த இடத்தில்?