
மகளிர் டி 20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் டிரையல் பிளேசர்ஸ் அணியை மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது சூப்பர்நோவாஸ் அணி.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டிகளை அறிமுகம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து நாடுகளைச் சேர்ந்த பிரபல வீராங்கனைகள் அடங்கிய இரண்டு அணிகள் அமைக்கப்பட்டன.
மும்பையில் ஹைதராபாத் - சென்னை அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்துக்கு முன்பு மகளிர் காட்சிப் போட்டி நடைபெற்றது.
டிரையல் பிளேசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர் நோவாஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கெüரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்தியா சார்பில் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, எல்சி பெரி, மேக் லேனிங், சூசி பேட்ஸ், டேனியல் வயாட். உள்ளிட்ட பிரபல வீராங்கனைகள் இரு அணிகளும் இடம் பெற்றிருந்தனர்.
முதலில் ஆடிய டிரையல் பிளேசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை குவித்தது. சூசி பேட்ஸ் 37 ஓட்டங்கள், ஜெùமியா 25 ஓட்டங்கள், தீப்தி சர்மா 21 ஓட்டங்கள் எடுத்து சிறப்பாக ஆடினார்.
சூப்பர் நோவா தரப்பில் மேகன் சூட், எல்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 130 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் ஆடிய சூப்பர் நோவா அணி தரப்பில் மிதாலி ராஜ் 22 ஓட்டங்கள், டேனியல் வயாட் 24 ஓட்டங்கள் சிறப்பான துவக்கத்தை தந்தனர்.
பின்னர் சோபி 20 ஓட்டங்கள், ஹர்மன்பிரீத் 21 ஓட்டங்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை எடுத்த சூப்பர் நோவாஸ் அணி வெற்றி பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.