
காயத்தில் இருந்து மீண்டு விம்பிள்டன் போட்டியில் வெல்ல முயற்சிப்பேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
குழந்தைப்பேறுக்காக பல மாதங்கள் டென்னிஸ் ஆடாமல் இருந்தார் செரீனா. பின்னர், பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் கலந்து கொண்டார். மூன்றாவது சுற்று வரை அபாரமாக ஆடி வெற்றி கண்டார் செரீனா. அவர், நான்காவது சுற்று ஆட்டத்தில் பரம வைரியான மரியா ஷரபோவோவுடன் மோதுவதாக இருந்தார்.
ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது டென்னிஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் செரீனா நேற்று செய்தியாளர்களிடம், "தசையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலக நேர்ந்தது. தற்போது இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வருகிறேன். பல மருத்துவ நிபுணர்களை சந்தித்து மருத்துவ சிகிச்சை பெற உள்ளேன்.
விம்பிள்டன் போட்டிகள் தொடங்க ஒரு மாதத்துக்கு மேல் உள்ளதால், அதற்காக தயாராகி வருகிறேன். காயத்தில் இருந்து மீண்டு விம்பிள்டன் போட்டியில் வெல்ல முயற்சிப்பேன்" என்று கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.