
எனது உடல் முழுவதும் கொண்டுள்ள திறமையை விட டிவில்லியர்ஸ் சுண்டு விரலில் அதிகமான திறமையை கொண்டுள்ளார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத், டிவில்லியர்ஸுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணி, 2019 உலக கோப்பயை வெல்லும் முனைப்பில் இருந்தது. அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்ததும் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தார். உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் உலகிற்கே அதிர்ச்சியளித்தது.
தென்னாப்பிரிக்கா கடந்து உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள டிவில்லியர்ஸின் ஓய்வு, மிகப்பெரிய அதிர்ச்சி. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் வாரியமும் மற்ற வீரர்களும் அதிர்ச்சியாகினர். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்தும், அடுத்த உலக கோப்பை வரை டிவில்லியர்ஸ் ஆடுவார் என நினைத்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில், டிவில்லியர்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத், டிவில்லியர்ஸ் ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. என்னுடைய உடல் முழுதும் உள்ள திறமையை விட அவர் சுண்டு விரலில் அதிக திறமையை வைத்திருக்கிறார். அவரை கிரிக்கெட் இழந்துள்ளது. அவர் இயற்கையாகவே திறமை மிக்க வீரர் என புகழாரம் சூட்டினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.