இந்தியாவின் பக்கத்துல கூட எந்த அணியாலும் வர முடியல..!

 
Published : Jun 05, 2018, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
இந்தியாவின் பக்கத்துல கூட எந்த அணியாலும் வர முடியல..!

சுருக்கம்

india continues first place in icc test ranking

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கு பிறகு, ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

இந்த தொடருக்கு பிறகு, ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. டெஸ்ட் தர வரசையில், 125 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும் 112 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் 106 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 9 மற்றும் 10 ஆகிய கடைசி இரண்டு இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 929 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார். 912 புள்ளிகளுடன் விராட் கோலி இரண்டாமிடத்தில் நீடிக்கிறார். 855 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாமிடத்திலும் 847 புள்ளிகளுடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நான்காமிடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் புஜாரா 5ம் இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில், ரபாடா முதலிடத்திலும் இங்கிலாந்தின் ஆண்டர்சன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!