கிரிக்கெட்டை தாண்டி விம்பிள்டன் டென்னிஸ் வரை சென்ற வாத்தி கம்மிங்..! ரோஜர் ஃபெடரருக்கு போட்ட கேப்ஷன் வைரல்

By karthikeyan VFirst Published Jul 3, 2022, 8:56 PM IST
Highlights

ரோஜர் ஃபெடரர் நடந்துவரும் புகைப்படத்தை பகிர்ந்து விம்பிள்டன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வாத்தி கம்மிங் என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டிருப்பது செம வைரலாகிவருகிறது.
 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி ஜாம்பவான் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்துவரும் நிலையில், அதற்கு ரோஜர் ஃபெடரர் வருகை தரும் புகைப்படத்தை பகிர்ந்து, வாத்தி கம்மிங் என விம்பிள்டன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில், அனிருத் இசையில் உருவான வாத்தி கம்மிங் பாடல் உலகளவில் மிகப்பிரபலமானது.

இதையும் படிங்க - ENG vs IND: ஐபிஎல் குறித்த ரிப்போர்ட்டரின் கேள்வி.. நறுக்குனு பதிலளித்த ஜடேஜா

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடல் நடன ஸ்டெப்பை போட்டு மகிழ்ந்தனர். களத்திற்கு வெளியே மட்டுமல்லாது, களத்திலும் வாத்தி கம்மிங் டிரேட்மார்க் நடனத்தை ஆடினர். அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இப்போது கிரிக்கெட்டை கடந்து டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் வரை வாத்தி கம்மிங் சென்றுவிட்டது. 

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்துவரும் நிலையில், லண்டனில் நடக்கும் ஒரு விழாவிற்கு சமகாலத்தின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் வருகை தந்தார். அவர் நடந்துவரும் புகைப்படத்தை பகிர்ந்து விம்பிள்டன் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வாத்தி கம்மிங் என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க - ENG vs IND: 8 வருஷத்துக்கு முன்பே என் திறமையை அடையாளம் கண்டது ஆண்டர்சன் தான்! சதத்திற்கு பின் ஜடேஜா நெகிழ்ச்சி

விம்பிள்டனின் அந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. உலகளவில், அதுவும் லண்டனில், விம்பிள்டன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடும் அளவிற்கு வாத்தி கம்மிங் பிரபலமாகியிருப்பதை அறிந்து அப்படக் குழுவினரும் விஜய் ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரைவிட ரஃபேல் நடால் மட்டுமே 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கூடுதலாக பெற்றுள்ளார். ஜோகோவிச்சும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் தான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!