ஆட்டத்தை புரட்டி போட்டது அந்த விக்கெட் தான்!! வெற்றி குறித்து வில்லியம்சன்

First Published Apr 30, 2018, 4:31 PM IST
Highlights
williamson opinion about winning against rajasthan royals


முக்கியமான நேரத்தில் யூசுப் பதான் வீழ்த்திய விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக ராஜஸ்தானுடனான வெற்றி குறித்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர் யூசுப் பதான், ஒரு ஆல்ரவுண்டர். நல்ல பேட்ஸ்மேன் என்பதைக் கடந்து ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடியவர். இந்திய அணிக்காக ஆடியபோதும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி, பல இக்கட்டான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பவுலர். 

இந்த ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சனின் தலைமையிலான ஹைதராபாத் அணியில் ஆடிவருகிறார். இந்த தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட யூசுப் பதான் பவுலிங் போடவில்லை.

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பதானை பவுலிங் போட அழைத்தார் கேப்டன் வில்லியம்சன். அவரது நம்பிக்கையை வீணாக்காத வகையில், தான் போட்ட இரண்டாவது பந்திலேயே பென் ஸ்டோக்ஸை போல்டாக்கினார். ரன் ஏதும் எடுக்கவிடாமல், பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதும், ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 

இந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், ராஜஸ்தான் பேட்டிங்கின் முதல் பாதியில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் இரண்டாவது பாதியில் போட்டி எங்கள் பக்கம் திரும்பியது. யூசுப் பதான் எடுத்த விக்கெட் ரொம்ப முக்கியமானது. பென் ஸ்டோக்ஸ் ஒரு அபாயகரமான வீரர். யூசுப் பதான் வீசியது சிறந்த பந்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த விக்கெட் மிகவும் அருமையானது என வில்லியம்சன் தெரிவித்தார்.
 

click me!