கோலி இதை செய்வாரானு கிரிக்கெட் உலகமே காத்துக்கிடக்குது!!

By karthikeyan VFirst Published Aug 26, 2018, 6:00 PM IST
Highlights

கோலியின் தலைமையில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 
 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுபெற்றதை அடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கடந்த 2014ம் ஆண்டு கோலி பொறுப்பேற்றார். அதன்பிறகு கோலியின் தலைமையில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றிதான், கோலியின் தலைமையிலான இந்திய அணி பெற்ற 22வது டெஸ்ட் வெற்றி. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன்களின் பட்டியலில் கங்குலியை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் கோலி.

இந்த 38 போட்டிகளில் ஒருமுறை கூட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே அணி ஆடியதில்லை. 38 போட்டிகளுக்கு அணி வீரர்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தது அணியில் ஒரு வீரரையாவது மாற்றியுள்ளார் கோலி. 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அணி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றது. அந்த அணியில் பேட்டிங், பவுலிங் கலவை சிறப்பாக இருப்பதாகவும் அதே அணி, நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடவேண்டும் என சேவாக் கருத்து தெரிவித்திருந்தார். ஹர்பஜனும் கோலி அணியை மாற்றிக்கொண்டே இருப்பதை விமர்சித்தார். 

ஒருவேளை அடுத்த போட்டியில் மூன்றாவது டெஸ்டில் ஆடிய அதே அணி ஆடினால், இதுதான் கோலி தலைமையில் அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணி ஆடுவது முதன்முறையாக அமையும். கிரிக்கெட் உலகமே கோலி இதை செய்வாரா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. 

 

click me!