காயம் காரணமாக விளையாடாமல் இருந்தவர்களுக்குதான் வைல்ட்கார்டு; ஊக்கமருந்து பயன்படுத்தியவர்களுக்கு இல்லை…

 
Published : May 18, 2017, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
காயம் காரணமாக விளையாடாமல் இருந்தவர்களுக்குதான் வைல்ட்கார்டு; ஊக்கமருந்து பயன்படுத்தியவர்களுக்கு இல்லை…

சுருக்கம்

Wildcards are those who do not play for injury Do not be used for doping ...

பிரெஞ்சு ஓபனில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு கேட்டதற்கு, “காயம் காரணமாக விளையாடாமல் இருந்தவர்களுக்கு மட்டுமே வைல்ட்கார்டு வழங்கப்படும். ஊக்கமருந்து பயன்படுத்தியவர்களுக்கு அல்ல என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர்.

பிரெஞ்சு ஓபனில் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஷரபோவா, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

அவர், தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த மாதம் சர்வதேச டென்னிஸுக்கு திரும்பினார். எனினும் நீண்ட நாள்கள் விளையாடாததன் காரணமாக அவர் தரவரிசையில் பின்னடைவை சந்தித்தார்.

தற்போது 211-ஆவது இடத்தில் இருக்கும் ஷரபோவா, தரவரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெற முடியாது. அதனால் தனக்கு வைல்ட்கார்டு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், பிரெஞ்சு ஓபன் போட்டி ஏற்பாட்டாளர்கள் வைல்ட்கார்டு வழங்க மறுத்து விட்டனர்

இதனைத், தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் ஷரபோவா.

இது தொடர்பாக பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளன தலைவர் பெர்னாட் கூறியது:

பிரெஞ்சு ஓபனில் ஷரபோவா வென்ற இரு பட்டங்களை அவரிடம் இருந்து யாரும் பறிக்கவில்லை. அதேநேரத்தில் வைல்ட்கார்டு வழங்குமாறு ஷரபோவா விடுத்திருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்தவர்களுக்கு மட்டுமே வைல்ட்கார்டு வழங்கப்படும். ஊக்கமருந்து பயன்படுத்தியவர்களுக்கு வைல்ட்கார்டு வழங்க முடியாது என்று கூறினார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!