வாவ்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக இவரா நியமிக்கப்பட்டுள்ளார்? 

First Published May 4, 2018, 11:45 AM IST
Highlights
who has been appointed as the new coach of Australian cricket team?


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அந்நாட்டு முன்னாள் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜஸ்டின் லேங்கர் (47) ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் அவர் எட்டிய 7,500 ரன்களில் 23 சதங்களும் அடங்கும். சுமார் 20 ஆண்டுகளாக களமாடிய அவர், 360 முதல்தர போட்டிகளில் 28,000 ரன்கள் அடித்துள்ளார். 

ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட் அணிகளான வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, பெர்த் ஸ்கோர்சர்ஸ் ஆகியவற்றுக்கு கடந்த 2012 நவம்பர் முதல் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அவர் பயிற்சியின் கீழ் பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணி 3 முறை பிக் பாஷ் லீக்கில் பட்டம் வென்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுடான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அணியின் பயிற்சியாளராக இருந்த டேரன் லேமன் பதவி விலகினார். 

இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தற்போது ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 22-ஆம் தேதி பொறுப்பேற்க இருக்கும் அவர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்கவுள்ளார்.

அவரது பயிற்சியின் கீழான இந்த 4 ஆண்டுகளில் 2 ஆஷஸ் தொடர்கள், 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி களம் காணவுள்ளது. 

tags
click me!