சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இறுதியில் லிவர்பூல்... பத்தாண்டு முயற்சி வீண்போகல...

First Published May 4, 2018, 11:35 AM IST
Highlights
Liverpool at the end of the Champions League football tournament ...


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 2-வது அணியாக லிவர்பூல் முன்னேறியது. 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இதன் 2-வது அரையிறுதியின் 2-வது பகுதி ஆட்டத்தில் லிவர்பூல் - ரோமா அணிகள் மோதின. 

விறுவிறுப்பாக நடைப்பெற்ற அரையிறுதியின் முதல் கோல் வாய்ப்பு லிவர்பூல் அணிக்கே கிடைத்தது. ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்தில் சேடியோ மனே அந்த அணியின் கணக்கைத் தொடங்கினார். அடுத்த 6-ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஜேம்ஸ் மில்னர் அடித்த 'ஓன் கோல்', ரோமாவின் கோல் கணக்கை தொடங்கியது. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

இதையடுத்து 25-ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஜார்ஜினியோ விஜ்னால்டம் ஒரு கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இவ்வாறாக முதல் பாதியின் முடிவில் லிவர்பூல் அணி 2-1 என முன்னிலை பெற்றது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் ரோமாவின் கை ஓங்கியது.

ஆட்டத்தின் 52-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் எடின் ஜெகோ அடித்த கோலால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது. இரு அணிகளும் முன்னிலை பெற போராடி வந்த நிலையில், ரோமா அணிக்கே அந்த வாய்ப்பு இரட்டிப்பாக கிடைத்தது.

ஆட்டத்தின் 86-ஆவது நிமிடத்தில் ஒரு கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்த ரட்ஜா நைன்கோலன், கூடுதல் நேரத்திலும் (90+4) ஒரு கோலடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 4-ஆக உயர்த்தினார். இதனால் அந்த அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இறுதியில் ரோமா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. எனினும், 2-வது அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணி 5-2 என்ற கணக்கில் வென்றிருந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் அந்த அணி தொடக்கத்திலேயே இரண்டு கோல்கள் அடித்ததால் மதிப்பீட்டு அடிப்படையில் 7-6 என்ற கணக்கில் லிவர்பூல் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

லிவர்பூல் அணி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டியில் ஆடிவந்தாலும் இப்போதுதான் முதல்  முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுகிறது. 

இதையடுத்து, வரும் 26-ஆம் தேதி உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள கோப்பைக்கான மோதலில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் மோதுகின்றன.
 

tags
click me!