ஒலிம்பிக்கில் தாய்நாட்டிற்கு தங்கம் பெற்றுத் தருவோம்.. இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Mar 22, 2021, 12:21 PM IST
Highlights

இந்த நிலையில், இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன் மற்றும் சரத் கமல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய விளையாட்டு கழகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. 

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் வென்று வருவோம் என ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள் உறுதியளித்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந் தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறுகிறது. 

இந்த நிலையில், இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன் மற்றும் சரத் கமல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய விளையாட்டு கழகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை தோகாவிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். அப்பொழுது  அவர்களை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சத்தியன் ஞானசேகரன்,
4 வது முறை ஒலிம்பிக்கில் விளையாட உள்ளேன், முன்னதாக இதைப்போல் ஒரு தரவரிசையில் சிறப்பான இடத்துடன் விளையாடவில்லை, அதனால், இந்தியாவிற்காக விளையாடி தேர்ந்தெடுக்க பட்டதில் நாங்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். 

வர இருக்க கூடிய நாட்களில் பயிற்சியை அதிகப்படுத்தி இந்தியாவிற்கு பதக்கம் எடுக்கும் அளவிற்கு விளையாட உள்ளோம். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடி, பதக்கம் பெற்று தருவோம் எனவும் உறுதியளித்தார். சரத் கமல் பேசிய பொழுது, விளையாட்டு ஆணையம் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. பயிற்சிக்கு தேவையானவற்றை தயார் செய்து வருகிறோம், வெளிநாடுகளுக்கும் சென்று பயிற்சி பெற உள்ளேன். தனக்கு முதல் ஒலிப்பிக் போட்டி என்பது பெருமையாக உள்ளது. இரட்டையர் பிரிவில் உறுதியாக இந்தியாவிற்கு ஒரு பதக்கம் பெற்று வருவேன் என கூறினார். 
 

click me!