87 ஆண்டுகள் கழித்து சாதனை புரிந்த முதல் வீரர் வார்னர்…

First Published Jan 4, 2017, 12:13 PM IST
Highlights


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 78 பந்துகளைச் சந்தித்து 117 நிமிடங்களில் சதம் அடித்ததன் மூலம், ஆஸ்திரேலியாவில் கடந்த 87 ஆண்டுகளில் இத்தகைய சாதனை புரிந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வார்னர்.

42 பந்துகளில் அரை சதம் எடுத்த வார்னர் பின்னர் 78 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 17 பவுண்டரிகள் அடித்ததால் அவரால் வேகமாக சதத்தை எட்டமுடிந்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய வார்னர், 78 பந்துகளைச் சந்தித்து 117 நிமிடங்களில் அதிவேகமாக சதம் அடித்தார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் கடந்த 87 ஆண்டுகளில் இத்தகைய சாதனை புரிந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் டொனால்ட் பிராட்மேன் 1930-ஆம் ஆண்டு லீட்ஸில் நடைபெற்ற போட்டியின் முதல் நாளின், முதல் பாதியில் 103 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் உணவு இடைவேளைக்கு முன்பு சதமடித்த 5-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் வார்னர்.

ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்பு வேறு எந்த வீரரும் முதல் நாளின் முதல் பகுதியில் அதாவது உணவு இடைவேளைக்கு முன்பு சதமடித்ததில்லை. முதல் ஆளாக சதமெடுத்து அந்தப் பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார் வார்னர். 

டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் இறுதியில் ஆஸி. அணி 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 365 வ் எடுத்துள்ளது.

வார்னர் 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரென்ஷா ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். 

 

tags
click me!