ஐடியா கொடுத்த வார்னர்.. ஒப்புக்கொண்ட ஸ்மித்.. செயல்படுத்திய பான்கிராஃப்ட்!! அம்பலப்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம்

First Published Mar 27, 2018, 2:21 PM IST
Highlights
warner gave idea for ball tampering


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அதற்கு உடந்தையாக இருந்த கேப்டன் ஸ்மித், ஐடியா கொடுத்த துணை கேப்டன் வார்னர் ஆகியோர் அவரவர் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஏற்கனவே களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மை மீதே கேள்விகளை எழுப்புகின்ற வகையில் இந்த சர்ச்சை உள்ளதால், ஸ்மித் மற்றும் வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது, ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கக்கூடிய பயிற்சியாளர் டேரன் லீமெனும் பதவி விலக வாய்ப்புள்ளது.

வழக்கமாக திறமையான எதிரணியினரை கடுமையாக விமர்சித்து எழுதும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்த விவகாரத்தில் சொந்த நாட்டு வீரர்களை விமர்சித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளதால் அந்த வேலையை சரியாக செய்து வருகின்றன.

பந்தை சேதப்படுத்தும் ஐடியா கொடுத்தது வார்னர்; அதை ஏற்றுக்கொண்டது கேப்டன் ஸ்மித்; செயல்படுத்தியது பான்கிராஃப்ட் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
 

click me!