இந்தியாவிற்கே பெருமை சேர்த்த "தமிழன் அருண்குமார்"..! டிக்கெட்டுக்கு கூட சொந்த பணம்...! கண்டுக்கொள்ளுமா அரசு..? மக்களாவது ..?

 
Published : Apr 21, 2018, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த "தமிழன் அருண்குமார்"..! டிக்கெட்டுக்கு கூட சொந்த பணம்...! கண்டுக்கொள்ளுமா அரசு..? மக்களாவது ..?

சுருக்கம்

walter arun kumar got first place in weight lifting

இந்தியாவிற்கே பெருமை சேர்த்த தமிழன் அருண்குமார்...டிக்கெட்டுக்கு கூட பணம் கொடுக்காத அரசு...மக்களாவது..?

காமன் வெல்த் போட்டியில் தொடர் தங்கம் வென்ற இந்தியா என்ற பெருமையோடு பெருமை தேடி தந்த விளையாட்டு வீரர்களையும் கவுரவிக்கப்பட்டனர்.

வீர்ர்கள் அனைவரும் இந்தியா வரும் போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.அரசு சார்பில் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை வரவேற்கலாம் .ஆனால், இதற்கு நேர் எதிராக இதே தமிழகத்தில் இருந்து, வால்டர் அருண்குமார் என்ற வீரர், காமன் வெல்த் போட்டிகள் நடந்த அதே வேளையில், இந்தோனேசியாவில் உள்ள பாலியில் நடைப்பெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்துக்கொண்டு முதலிடத்தை பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து உள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆனால் இவரை பற்றி செய்தி பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வில்லை...ஊடங்கங்களும் வால்டர் அருண்குமாரை மறந்து விட்டனர்.

வறுமையிலும் வென்ற வால்டர்

95  கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட வால்டர் அருண்குமார் 170  கிலோ பளுவை தூக்கி புதிய உச்சத்தை அடைந்து உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த போட்டியாளர்களில் மிக சிறந்த  வலுவான மனிதர் என்ற பட்டதையும் பெற்று பட்டியில் முதல் இடத்தையும் தட்டி வந்துள்ளார் வால்டர் அருண்குமார்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்தோனேசியா செல்ல விமான டிக்கெட் கூட தன் சொந்த செலவிலேயே எடுத்து சென்றுள்ளார் என்றால் பாருங்களேன்.

இவரை போன்றவர்கள் காமன் வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்டால் கட்டாயம் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை  சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை

ஆனால் அதற்கான வாய்ப்பை வழங்குவார்களா..? வால்டர் அருண்குமாருக்கு தேவையான வசதிகளை செய்து தருவார்களா..?

அவருக்கு ஏதாவது ஊக்கதொகை கிடைக்குமா..? இது போன்ற எந்த கேள்விக்கும் விடை தெரியாமல் உள்ளார் வால்டர் அருண்குமார்

மேலும், அவருடைய மிக பெரிய குறிக்கோளே காமன்வெல்த் மற்றும்  ஒலிம்பிக்கில் பங்கு பெற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பதே...!

வால்டர் அருண்குமாரின் கனவுகள் நிறைவேறுமா...?! பொறுத்திருந்து  பார்க்கலாம்.  

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

வீரர்களுக்காக கண்கொத்தி பாம்பாய் காத்திருக்கும் அணிகள்.. அபுதாபியில் இன்று IPL மினி ஏலம்
இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்! கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி சொன்ன குட்நியூஸ்!