நேருக்கு நேர் மோதும் தமிழர்கள்!! தினேஷ் கார்த்திக் - அஸ்வின் பலப்பரீட்சை.. கெய்லை சமாளிக்குமா கேகேஆர்?

Asianet News Tamil  
Published : Apr 21, 2018, 02:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
நேருக்கு நேர் மோதும் தமிழர்கள்!! தினேஷ் கார்த்திக் - அஸ்வின் பலப்பரீட்சை.. கெய்லை சமாளிக்குமா கேகேஆர்?

சுருக்கம்

punjab and kolkata match today

தமிழர்கள் கேப்டன்களாக இருக்கும் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக உள்ளனர். கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் பஞ்சாப் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினும் கேப்டன்களாக உள்ளனர். 

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுமே புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் உள்ளன. இரு அணிகளுமே சிறப்பாக ஆடிவருகின்றன.

அதிலும் அஸ்வினின் கேப்டன்சி, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்கு, கெய்ல் மற்றும் ராகுலின் அதிரடி ஆட்டம் நல்ல முடிவுகளை பெற்று தருகிறது. அதேபோல, முஜீபுர் ரஹ்மானின் ஸ்பின் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை, சுனில் நரைன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆண்ட்ரே ரசலும் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கிறார். குல்தீப் யாதவ் மற்றும் பியூஸ் சாவலும் சிறப்பான பங்களிப்பை அளித்துவருகின்றனர்.

இன்று நடக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில், கொல்கத்தாவும் பஞ்சாபும் மோதுகின்றன. சிறப்பான ஃபார்மில் இருக்கும் கெய்லை, கொல்கத்தா அணி சமாளிக்குமா என்ற கேள்வி உள்ளது. நரைனை வைத்து கெய்லை கட்டுப்படுத்தி வீழ்த்த கொல்கத்தா முயலும்.

பஞ்சாபில் கெய்ல், கொல்கத்தாவில் ரசல் ஆகிய இருவரின் அதிரடியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இரு அணியிலும் ஒவ்வொரு மிரட்டல் வீரர் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி
காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?