Hanghzou Asian Games 2023: பிடி உஷா சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்!

Published : Oct 02, 2023, 11:54 AM IST
Hanghzou Asian Games 2023: பிடி உஷா சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்!

சுருக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த 400மீ தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனையான வித்யா ராமராஜ் 55.42 வினாடிகளில் பந்தயத்தை கடந்து பிடி உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் 9ஆவது நாளான இன்று நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனையான வித்யா ராமராஜ் சாதனை படைத்துள்ளார். இவர், பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து பிடி உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பிடி உஷா 55.42 வினாடிகளில் பந்தயத்தை கடந்து 4ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் 39 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்க முடியாத இந்த சாதனையை வித்யா ராமராஜ் முறியடிக்காவிட்டாலும் அதனை சமன் செய்துள்ளார்.

 

கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ், கொரோகா காலகட்டத்திற்கு பிறகு சென்னைக்கு வந்துள்ளார். இவரது தந்தை ஒரு ஓட்டோரிக்‌ஷா ஓட்டுனர். வித்யாவிற்கு நித்யா ஒரு சகோதரி இருக்கிறார். இருவரும் இரட்டை சகோதரிகள். நித்யாவும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தடகள ஓட்டப்போட்டியில் பங்கேற்கிறார். வித்யா 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் நிலையில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா விளையாடி வருகிறார்.

இதற்கு முன்னதாக சண்டிகரில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 400 மீட்டர் தடகள போட்டியில் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார்.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!