இந்திய வீரர் விராட் கோலி தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்தார். இதை பார்த்ததும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அமைதியானார்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா தொடர்
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரையும் 3 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய கேப்டன் பும்ரா காயம் காரணமாக வெளியேறியதால் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தினார்.
இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்த விலையில், விராட் கோலி மீண்டும் ஒருமுறை இந்த தொடரில் பேசுபொருளாகியுள்ளார். அதாவது போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் விராட் கோலி செய்த ஒரு செயல், சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அது என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
"What is that about?" pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau)
ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த கோலி
அதாவது இன்று ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது மூன்றாவது விக்கெட்டாக ஸ்டீவ் ஸ்மித் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட் விழுந்ததும் விராட் கோலி கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேண்ட்டில் இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டு காலி பாக்கெட்டுகளை ரசிகர்களுக்குக் காட்டினார்.
"பாருங்கள், என் பாக்கெட்டில் ஏதும் இல்லை'' என்பதுபோல் அவரது செயல் இருந்தது. ஸ்மித் அவுட் ஆன உடன் கோலி ஏன் இப்படி செய்தார்? என பலருக்கும் கேள்வி எழுந்தது. பின்பு ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்யும் வகையில் கோலி இப்படி செய்கை செய்தது தெரியவந்தது. ஸ்மித் கடந்த 2018ம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியதால் கையும், களவுமாக சிக்கினார். இதை இண்டல் செய்யும்விதமாக விராட் கோலி ரசிகர்களிடம் தனது பாக்கெட்டில் கையை விட்டு ஏதும் இல்லை என்று கூறியுள்ளர்.
2018ம் ஆண்டு நடந்தது என்ன?
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் பந்து சேதப்படுத்தியதாக புகாரில் சிக்கினார்கள். இவர்கள் இருவரும் உப்புத்தாளில் பந்தை தேய்த்து சேதப்படுத்தியது வெட்டவெளிச்சமானது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட்க்கு 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் டேவிட் வார்னரும் உடைந்தையாக இருந்ததால் அவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.