ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம்; அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்; என்ன நடந்தது? ரசிகர்கள் ஷாக்!

By Rayar r  |  First Published Jan 4, 2025, 9:17 AM IST

சிட்னி டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது குறித்த தகவலை விரிவாக காண்போம். 


இந்தியா ஆஸ்திரேலியா 5வது டெஸ்ட் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்தியா, 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. 

Tap to resize

Latest Videos

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னணி வீரர்கள் விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல் சொதப்பினார்கள். பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம்

மார்னஸ் லபுஸ்சேன் பும்ரா பந்தில் 2 ரன்னில் கேட்ச் ஆனார். மேலும் டிராவிஸ் ஹெட் (4 ரன்), சாம் காண்டாஸ் (23 ரன்),ஸ்டீவ் ஸ்மித் (33 ரன்) வரிசையாக அவுட் ஆனார்கள். இப்போது வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முக்கியமான பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா திடீரென மைதானத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இன்று உணவு இடைவேளைக்கு பிறகு உள்ளே வந்த பும்ரா ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். தொடர்ந்து அவர் நடுவரிடம் தெரிவித்து விட்டு மைதானத்தில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேறினார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தொடர்ந்து அவர் அணியின் மருத்துவ ஊழியர்கள் உதவியுடன் மைதானத்தில் வெளியேறி மருத்துவமனைக்கு சென்றார்.

கடைசி இன்னிங்ஸ் விளையாடுவாரா?

அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. அப்போதுதான் காயத்தின் தன்மை எந்தளவுக்கு இருக்கிறது என்பது தெரியவரும். அனேகமாக இனிமேல் இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. பும்ராவுக்கு பதிலாக விராட் கோலி அணியை வழிநடத்த உள்ளார்.

click me!